/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பவானி ஆற்றில் கலக்கும் ரசாயன கழிவு நீர்; சத்தி, கோபி, பவானி மக்களுக்கு கேன்சர் அபாயம்

ADDED : நவ 11, 2024 07:29 AM

பவானிசாகர்: பவானிசாகரை அடுத்த கொத்தமங்கலம், இக்கரை தத்தப்பள்ளி மற்றும் பகுத்தம்பாளையம் பகுதியில், 15க்கும் மேற்பட்ட காகித ஆலைகள் இயங்கி வருகின்றன. இதில் பெரும்பாலான ஆலைகள், சுத்திகரிப்பு மையம் அமைக்கவில்லை.
சுத்திகரிக்காத கழிவு நீரை, குழாய் அமைத்து, நீர் நிலைகளில் வெளியேற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளது. இதனால் சுற்றுவட்டார பகுதி விவசாய கிணறுகளில் தண்ணீரின் நிறம் மாறியுள்ளது. விவசாயம் உட்பட எத்தகைய தேவைக்கும் பயன்படுத்த முடியாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தொடர்ந்து, குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் பவானிசாகர் சுற்றுவட்டார பகுதியில், சமீபத்தில் பெய்த மழையை பயன்படுத்தி, பல்வேறு இடங்களில் இரவு நேரத்தில் காகித ஆலை கழிவு நீரை திறந்து விட்டனர். குறிப்பாக இரவு நேரத்தில் கழிவு நீர் திறப்பது நடக்கிறது. இதுபோன்ற காகித ஆலைகள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: பவானிசாகர் சுற்றுவட்டார பகுதி காகித ஆலைகளில், சுத்திகரிப்பு கட்டமைப்பு இல்லை. இருந்தாலும் செயல்படுவதில்லை. ரசாயன கழிவுநீரை இரவு நேரங்களில் நீர்நிலைகளில், திறந்து விடுகின்றனர். ஓடைகள் வழியாக செல்லும் கழிவுநீர், இக்கரை தத்தப்பள்ளி பகுதியில் பவானி ஆற்றில் கலக்கிறது. இதனால் சத்தி, கோபி, பவானி உள்ளிட்ட பகுதிகளில், பவானி ஆற்று தண்ணீரை குடிக்கும் மக்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. இவ்வாறு கூறினார்.