/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
துணை தாசில்தாரிடம் ரூ.2 கோடி மோசடி: சென்னை வாலிபர் கைது
/
துணை தாசில்தாரிடம் ரூ.2 கோடி மோசடி: சென்னை வாலிபர் கைது
துணை தாசில்தாரிடம் ரூ.2 கோடி மோசடி: சென்னை வாலிபர் கைது
துணை தாசில்தாரிடம் ரூ.2 கோடி மோசடி: சென்னை வாலிபர் கைது
ADDED : டிச 26, 2024 03:08 AM
பெருந்துறை: பெருந்துறையில், துணை தாசில்தாரிடம், வேலை வாங்கி தருவ-தாக கூறி, இரண்டு கோடி ரூபாய் மோசடி செய்த, சென்னை வாலிபரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை திருவேங்கடம்பாளையம் காந்தி நகரை சேர்ந்தவர் சுந்தராம்பாள், 51. இவர், ஆப்பக்கூடல் சக்தி சுகர்ஸ் நிறுவனத்தில், வருவாய் துறை துணை தாசில்தாராக பணி-யாற்றி வருகிறார். 2022 மார்ச்சில், சென்னை செங்குன்றம் புள்-ளிலைன் பஜனை கோவில் தெருவை சேர்ந்த ராமதாஸ் மகன் கலைவாணன், 37, தன்னை போலீஸ் டி.எஸ்.பி., என்று கூறி சுந்த-ராம்பாளிடம் பழக்கமானார்.
கடந்த, 2023ல் வருமான வரித்துறையில், சுந்தராம்பாள் மகன் சண்முகராஜூவுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி, கலை-வாணன் சிறுக, சிறுக, இரண்டு கோடி ரூபாய் பெற்றுள்ளார். ஆனால் இதுவரை வேலை வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை. இது குறித்து கேட்டால் மகனை கொன்று விடுவதாக மிரட்டி வருகிறார் என, கலைவாணன் மீது, சுந்த-ராம்பாள் பெருந்துறை போலீசில் கடந்த, 9ல் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து, கலைவாணனை கைது செய்து தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

