/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சோதனை ஓட்டத்தில் சென்னிமலை கூட்டு குடிநீர் திட்டம்
/
சோதனை ஓட்டத்தில் சென்னிமலை கூட்டு குடிநீர் திட்டம்
சோதனை ஓட்டத்தில் சென்னிமலை கூட்டு குடிநீர் திட்டம்
சோதனை ஓட்டத்தில் சென்னிமலை கூட்டு குடிநீர் திட்டம்
ADDED : செப் 21, 2024 07:23 AM
சென்னிமலை: சென்னிமலையில் பள்ளி மாணவ, மாணவியர், 352 பேருக்கு, அரசின் இலவச சைக்கிள் உள்ளிட்ட நலத்திட்ட உதவி வழங்கும் விழா நேற்று நடந்தது. கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, எம்.பி., பிரகாஷ் முன்னிலை வகித்தனர். விழாவில் நலத்திட்ட உதவி-களை வழங்கி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது:
இங்கு நெசவாளர்களுக்கு மருத்துவ முகாம் நடந்தது. பல்வேறு பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா, மகளிர் குழுவின-ருக்கு கடனுதவி, மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, முடிவுற்ற பணிகள்
துவக்கி வைக்கப்பட்-டுள்ளது. சென்னிமலை பகுதியில் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் காவிரியை நீராதாரமாக கொண்டு, 480 கோடி ரூபாய்
மதிப்பில் குடிநீர் திட்டப்பணி மேற்கொள்ளப்பட்டு, சோதனை ஓட்டம் நடந்து வருகிறது.சென்னிமலை மலைப்பகுதியில், 7 கோடி ரூபாயில் தார்சாலை புதுப்பிக்கும் பணி உட்பட பல்வேறு பணி நடந்து வருகிறது. மலை கோவிலில்
பக்தர்கள் உணவருந்தும் கூடம், மலை அடிவா-ரத்தில் பஸ்கள் நிறுத்துமிடத்தில் பயணியர் தங்குமிடம், எக்கட்-டாம்பாளையத்தில் விளை
பொருட்களை பாதுகாக்கும் வகையில், 250 டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதன கிடங்கு பணி நடந்து வருகிறது. இவ்வாறு பேசினார்.விழாவில் சென்னிமலை யூனியன் சேர்மேன் காயத்ரி இளங்கோ, மாவட்ட பஞ்., கவுன்சிலர் செல்வம், சென்னிமலை டவுன் பஞ்., தலைவர்
ஸ்ரீதேவி உட்பட பலர் பங்கேற்றனர்.