/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சென்னிமலை கோவிலில் வேல் வழிபாடு தொடக்கம் கழிப்பறை கட்டும் பணி நிறுத்தம்-சுற்றுச்சுவர் இல்லை

ADDED : நவ 13, 2024 03:05 AM
சென்னிமலை:சென்னிமலையில்
மலை மீதுள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில், இந்து அன்னையர் முன்னணி
சார்பில், இரண்டாமாண்டு வேல் வழிபாடு நேற்று தொடங்கியது.
கடந்த
ஜன.,1ம் தேதி முதலாமாண்டு வேல் வழிபாடு, சென்னிமலை முருகன் கோவிலில்
தொடங்கி, பழனி முருகன் கோவிலில் நிறைவடைந்தது. இந்நிலையில்
நடப்பாண்டு வேல் வழிபாடு டிச.,25ம் தேதி நடக்கிறது. விழா தொடக்கம்
சென்னிமலை முருகன் கோவிலில் நேற்று காலை நடந்தது. இந்து முன்னணி மாநில
தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை வகித்தார்.
மாநில பொது
செயலாளர் கிஷோர்குமார், வேல் வழிபாட்டு மன்ற நிர்வாகிகள், இந்து
அன்னையர் முன்னணி நிர்வாகிகள் வேலுடன் வந்தனர். முருகன் சன்னதி,
மார்க்கண்டேஸ்வரர் மற்றும் காசி விசுவநாதர் சன்னதியில் வேலுக்கு
சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
அப்போது காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியதாவது:
கொங்கு
மண்டலத்தில் உள்ள சிவன்மலை, மருதமலை உள்ளிட்ட ஏழு முருகன்
திருத்தலங்களில் வேல் வழிபாடு செய்யப்படுகிறது. திருப்பூர், கோவை,
ஈரோடு மாவட்ட மக்கள் வழிபாடு செய்ய, இந்த வேல் எடுத்து செல்லப்படும்.
நிறைவாக வரும் டிச., 25ம் தேதி திருப்பூர் மாவட்டம் கொங்கணகிரி முருகன்
கோவிலில் வேல் வழிபாடு நடந்த பிறகு, அலகுமலைக்கு சென்று வேல் வழிபாடு
நிறைவு பூஜை நடக்கும். இவ்வாறு கூறினார்.