/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சென்னிமலை கோவில் தைப்பூச முகூர்த்தக்கால்
/
சென்னிமலை கோவில் தைப்பூச முகூர்த்தக்கால்
ADDED : நவ 28, 2025 12:51 AM
சென்னிமலை, சென்னிமலையில் மலை மீதுள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில், நடப்பாண்டு தைப்பூச தேர்த்திருவிழா 2026 ஜன., 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி பிப்., 1ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.
இதற்காக முகூர்த்தக்கால் நடும் நிகழ்வு, சென்னிமலை கைலசாநாதர் கோவிலில் நேற்று நடந்தது. முருகன் கோவில் தலைமை அர்ச்சகர் ராமநாத சிவாச்சாரியார் தலைமை வகித்து பூஜை செய்தார்.
அதை தொடர்ந்து விழாவை மக்களுக்கு அறிவிக்கும் விதமாக, சென்னிமலை நான்கு ராஜவீதிகளில் முருகப்பெருமான் வேல் மேள, தாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்தனர். அதன் பின்பு தேரோட்டத்தில் ஈடுபடக்கூடிய தேர் வேலை செய்யும் பணியாளர், வாத்திய குழுவினர், அர்ச்சகர், ஒதுவார் மூர்த்தி, கோவில் பணியாளர்களுக்கு, வழக்கப்படி தலைமை குருக்கள் தேங்காய், பழம், அச்சு வெல்லம், விரலி மஞ்சள் ஆகிய பொருட்களை பிரசாதமாக வழங்கினார்.

