/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சென்னிமலை டவுன் பஞ்.,ல்100 சதவீதம் வரி வசூல்
/
சென்னிமலை டவுன் பஞ்.,ல்100 சதவீதம் வரி வசூல்
ADDED : ஏப் 26, 2025 01:17 AM
சென்னிமலை:சென்னிமலை டவுன் பஞ்., சாதாரண கூட்டம், தலைவர் ஸ்ரீதேவி அசோக் தலைமையில் நேற்று நடந்தது.
துணை தலைவர் சவுந்திரராஜன், கவுன்சிலர்கள் பங்கேற்றனர். மார்ச், 2025 வரையிலான சொத்துவரி, 83.௩௧ லட்சம் ரூபாய்; தொழில்வரி, 10 லட்சம் ரூபாய், குடிநீர் கட்டணம், 86.௮௦ லட்சம் ரூபாய் மற்றும் வரியில்லா இனங்கள் வகையில், 23.73 லட்சம் ரூபாய் என, அனைத்தும் நிலுவையின்றி வசூலிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. வசூல் பணியில் ஈடுபட்ட பேரூராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
சென்னிமலை அரசு ஆரம்ப சுகதார நிலையத்தை, 65 லட்சம் ரூபாய் மதிப்பில் மேம்பாடு செய்தல், அரச்சலுார் ரோடு பொது கழிப்பிடம், 10 லட்சம் ரூபாய் மதிப்பில் பராமரிப்பு செய்தல் என்பது உள்ளிட்ட எட்டு தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றினர்.