ADDED : டிச 21, 2024 01:36 AM
இளங்கோவனுக்கு முதல்வர் இரங்கல்
ஈரோடு, டிச. 21-
ஈரோட்டில் நேற்று நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், முதல்வர் ஸ்டாலின் தனது பேச்சை துவங்கியதும், ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ., இளங்கோவன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பேசினார். அவர் பேசியதாவது: இந்த விழாவில், 1,36௯ கோடி ரூபாயிலான திட்டங்களை செயல்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன். அதேநேரம் கடந்த வாரம் கிழக்கு எம்.எல்.ஏ., இளங்கோவன் நம்மை விட்டு பிரிந்தது மிகுந்த சோகமாகும். ஈ.வெ.ரா., பேரன், மத்திய அமைச்சர், எம்.பி., - எம்.எல்.ஏ., - தமிழக காங்., தலைவர் என பல்வேறு நிலைகளில் சிறப்பாக செயல்பட்டவர். அவரது இழப்பு, ஈரோடு தொகுதி மக்களுக்கு மட்டுமல்ல, தமிழகத்துக்கு பெரிய இழப்பு. அவர் நம்மோடு இம்மேடையில் இன்று இருந்திருந்தால், அரசின் சாதனை, செயல் திட்டங்களை எடுத்து கூறியிருப்பார். அவருக்கு இக்கூட்டத்தின் வாயிலாக அஞ்சலியை செலுத்தி கொள்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.