/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அதிகாரிகளுடன் இரவில் முதல்வர் ஆலோசனை
/
அதிகாரிகளுடன் இரவில் முதல்வர் ஆலோசனை
ADDED : டிச 20, 2024 07:09 AM
ஈரோடு: ஈரோட்டுக்கு வந்த முதல்வர் ஸ்டாலின், காளிங்கராயன் இல்லத்தில் நேற்றிரவு தங்கினார். முன்னதாக நேற்று மதியம் முதல் அரசின் திட்டம் தொடர்பான கள ஆய்வு, தி.மு.க., நிர்வாகிகளுடன் சந்திப்பு உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இரவு, 8:20 மணிக்கு காளிங்கராயன் இல்லத்துக்கு வந்த முதல்வர், இரவு உணவு உட்கொண்டார். பின் வளர்ச்சி திட்டப்பணிகள், நடந்து வரும் பணிகள், மானிய கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்ட திட்டங்கள், அறிவிப்புக்களின் நிலைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இதில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, அமைச்சர்கள் நேரு, முத்துசாமி, எம்.பி., அந்தியூர் செல்வராஜ், மாநகராட்சி ஆணையர் மணீஷ் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். மேலும், இன்று நடக்கவுள்ள அரசு விழாவில் செயல்பாட்டுக்கு வரும் பணி, அதன் பயன்பாடு குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.