/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காய்கறி, மளிகை சந்தை வளாகத்துக்கு அடிக்கல் நாட்டும் முதல்வர் ஸ்டாலின்
/
காய்கறி, மளிகை சந்தை வளாகத்துக்கு அடிக்கல் நாட்டும் முதல்வர் ஸ்டாலின்
காய்கறி, மளிகை சந்தை வளாகத்துக்கு அடிக்கல் நாட்டும் முதல்வர் ஸ்டாலின்
காய்கறி, மளிகை சந்தை வளாகத்துக்கு அடிக்கல் நாட்டும் முதல்வர் ஸ்டாலின்
ADDED : டிச 11, 2024 01:22 AM
காய்கறி, மளிகை சந்தை வளாகத்துக்கு
அடிக்கல் நாட்டும் முதல்வர் ஸ்டாலின்
ஈரோடு, டிச. 11-
ஈரோடு மாவட்ட கள ஆய்வு பணியில், முதல்வர் ஸ்டாலின் வரும், ௧௯, ௨௦ல் ஈடுபடுகிறார். 19ல் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்து, கார் மூலம் ஈரோடு விருந்தினர் மாளிகைக்கு வருகிறார். பின் மேட்டுக்கடை தங்கம் மகாலில் நடக்கும் தி.மு.க., நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார். 20ம் தேதி காலை, 10:00 மணிக்கு சோலார் புதிய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் நடக்கும் அரசு விழாவில், 18.48 கோடி ரூபாய் மதிப்பில் புதிய காய்கறி, பழங்கள், மளிகை மொத்த சந்தை வளாகத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். சூரம்பட்டி நால்ரோட்டில் வீட்டு வசதி வாரியம் சார்பில், 16 கோடி ரூபாயில், 6 தளங்களுடன் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு, 4 தளங்களில் வணிக வளாகத்துடன் கூடிய கட்டணம், புதிய பஸ் ஸ்டாண்டில் புதிய வணிக வளாகம், ஈரோடு திண்டல் வரை நெடுஞ்சாலை துறை சார்பில், 4 வழிச்சாலையாக விரிவாக்கப்பட்ட வெளி வட்ட சுற்றுச்சாலை, வைராபாளையத்தில் மாநகராட்சி உரக்கிடங்கில் புதிய அலகு, சென்னிமலையில் சுத்திகரிப்பு நிலையம் போன்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும், அடிக்கல் நாட்டியும் வைக்க உள்ளார். தவிர பல்வேறு துறை சார்பில், 50,000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்குகிறார். முதல்வர் விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள், வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா முன்னிலையில் நடந்து வருகிறது. சோலாரில் நடக்கும் அரசு விழாவுக்காக, பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது.