/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
50,000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்குகிறார்

ADDED : டிச 20, 2024 12:54 AM
ஈரோடு, டிச. 20-
ஈரோட்டில் இன்று முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் அரசு விழாவில், 50,088 பயனாளிகளுக்கு, 284 கோடி ரூபாயில் நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.
ஈரோட்டுக்கு நேற்று வருகை புரிந்த முதல்வர், பல்வேறு நிகழ்ச்சிகள், கள ஆய்வில் பங்கேற்றார்.
காளிங்கராயன் விடுதியில் தங்கி இருக்கும் முதல்வர் ஸ்டாலின், இன்று காலை, 9:00 மணிக்கு ஈரோடு, சோலார் புதிய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் நடக்க உள்ள அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கிறார்.
அங்கு, 951.20 கோடி ரூபாயில் முடிவுற்ற, 559 திட்டப்பணிகளை துவக்கி வைக்கிறார். அத்துடன், 133.66 கோடி ரூபாயில், 222 புதிய வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பின், 284.2 கோடி ரூபாய் மதிப்பில், 50,088 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார்.
கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வரவேற்கிறார். வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், எம்.பி.,க்கள் கே.இ.பிரகாஷ், அந்தியூர் செல்வராஜ், அந்தியூர் எம்.எல்.ஏ., ஏ.ஜி.வெங்கடாசலம் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.