/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.1,377 கோடிக்கான வளர்ச்சி திட்டப்பணிகள் நாளைய அரசு விழாவில் முதல்வர் துவக்கி வைப்பு
/
ரூ.1,377 கோடிக்கான வளர்ச்சி திட்டப்பணிகள் நாளைய அரசு விழாவில் முதல்வர் துவக்கி வைப்பு
ரூ.1,377 கோடிக்கான வளர்ச்சி திட்டப்பணிகள் நாளைய அரசு விழாவில் முதல்வர் துவக்கி வைப்பு
ரூ.1,377 கோடிக்கான வளர்ச்சி திட்டப்பணிகள் நாளைய அரசு விழாவில் முதல்வர் துவக்கி வைப்பு
ADDED : டிச 19, 2024 01:15 AM
ஈரோடு, டிச. 19-
ஈரோடு மாவட்டத்தில், நாளை (20ம் தேதி) நடக்கும் அரசு விழாவில், 1,377 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகளை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் இன்று (19) மதியம், 2:00 மணிக்கு ஈரோட்டுக்கு வருகை புரிந்து, காளிங்கராயன் இல்லத்தில் ஓய்வெடுக்கிறார். மாலையில், ஈரோடு, மேட்டுக்கடை தங்கம் மகாலில் நடக்கும் தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திலும், பின், ஈரோடு முத்து மகாலில் நடக்கும் முன்னாள் எம்.எல்.ஏ., சந்திரகுமார் இல்ல திருமண வரவேற்பிலும் பங்கேற்கிறார்.
பின், நாளை ஈரோடு, சோலார் புது பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் காலை, 10:00 மணிக்கு நடக்கும் அரசு விழாவில் பங்கேற்கிறார். அங்கு, 18.48 கோடி ரூபாயில் ஒருங்கிணைந்த காய்கறி, பழங்கள், மளிகை மொத்த விற்பனை வணிக வளாக கட்டுமான பணி, அரச்சலுார் அருகே ஜெயராமபுரத்தில், 4.90 கோடி ரூபாயில் பொல்லான் சிலையுடன் அரங்கம், 141.41 கோடி ரூபாய் மதிப்பில் புதிய வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார்.
பின், சென்னிமலை யூனியனில், 22 பஞ்.,களில், 434 ஊரக குடியிருப்புகளுக்கு கூட்டு குடிநீர் திட்டம், 482 கோடி ரூபாயிலும், ஈரோடு சூரம்பட்டி 4 ரோட்டில், 16 கோடி ரூபாயில், 6 தளங்களுடன் வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு, 4 தளங்களில் வணிக வளாக கட்டடம், பவானிசாகரில் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம், 33 கோடி ரூபாயில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள், 104.01 கோடி ரூபாயில் கோபி, சத்தி, பவானியில் கட்டப்பட்டுள்ள அடுக்கு மாடி குடியிருப்புகள், 59.60 கோடி ரூபாயில் 4 வழிச்சாலையாக விரிவுபடுத்தப்பட்ட தரம் உயர்த்தப்பட்ட ஈரோடு வெளி வட்ட சுற்றுச்சாலை உட்பட, 952.35 கோடி ரூபாய் மதிப்பில், 560 முடிவுற்ற பணிகளை முதல்வர் திறந்தும், துவக்கியும் வைக்கிறார்.
பின் பல்வேறு துறைகள் சார்பில், எட்டு மாவட்டங்களை சேர்ந்த, 50,088 பயனாளிகளுக்கு, 284 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். ஏற்பாடுகளை வீட்டு வசதித்
துறை அமைச்சர் முத்துசாமி, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஆகியோர் செய்து வருகின்றனர்.
விழா பந்தலில், 18 ஆயிரம் இருக்கைகள் போடப்பட்டு, 20 ஆயிரம் பேர் பங்கேற்க ஏற்பாடு செய்துள்ளனர்.

