/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சித்தோட்டில் பெற்றோருடன் துாங்கிய குழந்தை கடத்தல்
/
சித்தோட்டில் பெற்றோருடன் துாங்கிய குழந்தை கடத்தல்
ADDED : அக் 17, 2025 01:29 AM
பவானி, சித்தோடு அருகே, சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் கீழ், கோண வாய்க்கால் பகுதியில், ஆந்திர மாநிலம் நெல்லுாரை சேர்ந்த வெங்கடேஷ்-கீர்த்தனா தம்பதி, ஆறு ஆண்டுகளாக தங்கியுள்ளனர். வீட்டு உபயோகத்துக்கான துடைப்பம் தயாரித்து விற்கும் தொழில் செய்கின்றனர்.
தம்பதிக்கு ஐந்து வயதில் ஆண் குழந்தை, ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் இரவு, குழந்தைகளுடன் பெற்றோர் கொசுவலை கட்டி அதற்குள் படுத்து துாங்கினர். அதிகாலை கீர்த்தனா எழுந்து பார்க்கும் போது, கொசுவலை கத்தியால் அறுக்கப்பட்ட நிலையில் பெண் குழந்தையை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த தம்பதி, சித்தோடு போலீசில் நேற்று புகார் கொடுத்தனர். அங்கு சென்ற போலீசார் ஆய்வு நடத்தி விசாரணை மேற்கொண்டனர். சிசிடிவி காட்சிகள் அடிப்படையில், தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வருவதாக, போலீசார் தெரிவித்தனர்.