ADDED : அக் 17, 2025 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் மண்டல அளவிலான கலைத்திருவிழா போட்டி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஈரோடு கருங்கல்பாளையம் காமராஜ் அரசு மேல்நிலை பள்ளியில் நேற்று கலை திருவிழா போட்டி நடந்தது.
இதில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ஈரோடு ப.செ.பார்க் அரசு மகளிர் மாதிரி மேல்நிலை பள்ளி மாணவிகள், போட்டியில் பங்கேற்ற பின், பள்ளிக்கு சரக்கு ஆட்டோவில் அழைத்து செல்லப்பட்டனர். இது பார்ப்போரை கவலை அடைய செய்தது. இதுகுறித்து பெற்றோர் கூறியதாவது: பள்ளி மாணவிகளை பாதுகாப்பாக அழைத்து சென்று வர வேண்டும். பாதுகாப்பற்ற பயணத்தால் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இவ்வாறு கூறினர்.