/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பழைய ஓய்வூதியம் கேட்டு ஆர்ப்பாட்டம்
/
பழைய ஓய்வூதியம் கேட்டு ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 17, 2025 01:28 AM
ஈரோடு, ஈரோடு தாலுகா அலுவலகம் முன், சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் சார்பில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் கண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்ட செயலர் வெங்கிடு, மாநில துணை தலைவர் சாமிகுணம், நிர்வாகிகள் உஷாராணி, செந்தாமலர் கோரிக்கை குறித்து பேசினர்.
தமிழக அரசு பழைய ஓய்வூதியத்தை, தமிழகத்தின், 6.5 லட்சம் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கும் வழங்காமல் இழுத்தடிக்கிறது. சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கத்தின் தொடர் போராட்டத்தால் அரசு குழு அமைத்து செப்., க்குள் அறிக்கை அளிக்க கோரியது. அக்குழு இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்துவிட்டு, மேலும் இரண்டு மாத அவகாசம் கேட்பதை கண்டிக்கிறோம். வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதியத்தை வழங்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.