/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
படுக்கை அறையில் சிக்கி தவித்த குழந்தை மீட்பு
/
படுக்கை அறையில் சிக்கி தவித்த குழந்தை மீட்பு
ADDED : நவ 30, 2025 02:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, நஈரோடு கருங்கல்பாளையம் கிருஷ்ணன் வீதியில் ராஜூ-கோகிலா தம்பதி வசிக்கின்றனர். கோகிலா அப்பகுதியில் அழகு நிலையம் வைத்துள்ளார். இவர்களின் மகன் யாழன், 4; நேற்று காலை படுக்கை அறையில் விளையாடி கொண்டிருந்தான்.
அப்போது படுக்கை அறை கதவு தானாக மூடி கொண்டது. திறக்க முடியாததால் இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஒரு மணி நேரம் போராடியும் கதவை திறக்க முடியவில்லை. இதனால் குழந்தையும் அழத் தொடங்கியது. ஈரோடு தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்க, கதவை திறக்க தேவையான உபகரணங்களுடன் சென்றனர். கதவை கைகளால் தள்ளியதில் திறந்து கொண்டது. தவித்த குழந்தையை பெற்றோர் எடுத்து ஆசுவாசப்படுத்தினர்.

