/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சங்கமேஸ்வரர் கோவிலில் சித்திரை தேரோட்டம்
/
சங்கமேஸ்வரர் கோவிலில் சித்திரை தேரோட்டம்
ADDED : மே 10, 2025 01:44 AM
பவானி, பவானி, கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலில், நடப்பாண்டு சித்திரை திருவிழா கடந்த, 2ல் சங்கமேஸ்வரர் சன்னதி கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதை தொடர்ந்து, 6ல் பஞ்ச மூர்த்தி, ஆதிகேசவ பெருமாள், 63 நாயன்மார்களுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பிறகு ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்தி புறப்பாடு, பெருமாள் கருட வாகனத்தில், 63 நாயன்மார்கள் புறப்பட்டனர்.
ஆதிகேசவ பெருமாள் சன்னதியில், ஸ்ரீதேவி, பூதேவியுடன், நேற்று காலை திருக்கல்யாண உற்சவமும், பின்னர் உற்சவமூர்த்திகள் திருத்தேரில் எழுந்தருளி தேரோட்டம் நடந்தது. இதில் பவானி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
வேதநாயகி அம்மன், சங்கமேஸ்வரருக்கு இன்று காலை திருக்கல்யாணம் நடக்கிறது. இதை தொடர்ந்து திருத்தேரில் இருவரும் பவனி செல்கின்றனர். நாளை பரிவேட்டை, தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. 13-ம் தேதி காலை நடராஜர் தரிசனத்துடன், ஆதிகேசவ பெருமாள் திருமஞ்சன நீராட்டு விழாவுடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.