/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அன்னை காமாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா; அலகு குத்தி தேர் இழுத்த பக்தர்கள்

ADDED : மே 08, 2025 01:06 AM
புன்செய்புளியம்பட்டி:அன்னை காமாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, அலகு குத்தி தேர் இழுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
புன்செய்புளியம்பட்டி, சேரன் வீதியில் அன்னை காமாட்சியம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டு
தோறும் சித்திரை திருவிழா விமர்சையாக கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு சித்திரை திருவிழா கடந்த ஏப்.,29ல், பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நேற்று முன்தினம் இரவு முத்து பிள்ளையார் கோவிலில் இருந்து, சக்தி கரகத்துடன் அம்மை அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை, காமாட்சியம்மன்-ஏகம்பரநாதர் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து, பக்தர்கள் அலகு குத்தி தேர் இழுத்தனர். பறவை காவடி எடுத்தும், நீண்ட வேல் கம்புகளை அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். சிறுவர் சிறுமியர் பால்குடங்களை எடுத்தும், பெண்கள் அக்னி சட்டி ஏந்தியும் ஊர்வலமாக வந்தனர். இன்று (மே 8) மாவிளக்கு, முளைப்பாரி ஊர்வலம் மற்றும் மஞ்சள் நீராட்டு விழா, நாளை (மே 9) குத்துவிளக்கு பூஜையுடன் விழா நிறைவடைகிறது.