/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோட்டில் சிறுவர்களை கவர்ந்த சாக்லெட் விநாயகர் அலங்காரம்
/
ஈரோட்டில் சிறுவர்களை கவர்ந்த சாக்லெட் விநாயகர் அலங்காரம்
ஈரோட்டில் சிறுவர்களை கவர்ந்த சாக்லெட் விநாயகர் அலங்காரம்
ஈரோட்டில் சிறுவர்களை கவர்ந்த சாக்லெட் விநாயகர் அலங்காரம்
ADDED : ஆக 28, 2025 01:14 AM
ஈரோடு, ஈரோட்டில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆனந்த விநாயகருக்கு, சாக்லெட்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது, சிறுவர்களை வெகுவாக கவர்ந்தது.
விநாயகர் சதுர்த்தி நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஈரோடு வீரப்பன்சத்திரம் மாரப்பன் வீதியில், 5 அடி உயர ஆனந்த விநாயகர் சிலை, நேற்று அதிகாலை பிரதிஷ்டை செய்யப்பட்டு கணபதி ஹோமம் நடந்தது. ஆனந்த விநாயகரை சாக்லெட்களால் அலங்கரித்து இருந்தனர். 5 ஸ்டார், டைரி மில்க், குச்சி மிட்டாய், மஞ்ச், கிட்கேட், மில்கி பார், எக்லர், கோபிகா போன்ற பல விதமான, 5 கிலோ சாக்லெட்களை விநாயகர் சிலையை சுற்றி அலங்காரம் செய்து வைத்தனர். ஆனந்த விநாயகர் நேற்று பக்தர்களுக்கு சாக்லெட் விநாயகராக அருள் பாலித்தார். இது அப்பகுதியில் இருந்த சிறுவர், சிறுமியரை வெகுவாக கவர்ந்ததால், அவர்கள் விநாயகரை தரிசனம் செய்து சென்றனர்.
அலங்காரத்தில் வைக்கப்பட்டுள்ள சாக்லெட்களை இன்று (28ல்) அன்னதானத்துக்கு பின், அங்கு வரும் சிறுவர், சிறுமியருக்கு வழங்கப்பட உள்ளது என, ஆனந்த விநாயகர் நண்பர்கள் தெரிவித்தனர்.

