/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு ஜவுளி வாரச்சந்தையில் கிறிஸ்துமஸ் விற்பனை துவக்கம்
/
ஈரோடு ஜவுளி வாரச்சந்தையில் கிறிஸ்துமஸ் விற்பனை துவக்கம்
ஈரோடு ஜவுளி வாரச்சந்தையில் கிறிஸ்துமஸ் விற்பனை துவக்கம்
ஈரோடு ஜவுளி வாரச்சந்தையில் கிறிஸ்துமஸ் விற்பனை துவக்கம்
ADDED : டிச 18, 2024 07:11 AM
ஈரோடு: ஈரோடு, பன்னீர்செல்வம் பூங்கா அருகே உள்ள கனி மார்க்கெட் ஜவுளி வணிக வளாகம், அதனை சுற்றிய வாரச்சந்தை கடைகள், டி.வி.எஸ்., வீதி, மணிக்கூண்டு சாலை, ஈஸ்வரன் கோவில் வீதி, காந்திஜி சாலையில் உள்ள பனியன் மார்க்கெட்டுகளில், நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று இரவு வரை வாரச்சந்தை விற்பனை நடந்தது.
கடந்த வாரங்களில் கடும் மழை பெய்ததால், ஜவுளி சந்தையில் கூட்டம் மிகவும் குறைவாக இருந்தது. நேற்றைய சந்தைக்கு கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து வியாபாரிகள், கடைக்காரர்கள், பொதுமக்கள் அதிகமாக வந்திருந்தனர்.
இதுபற்றி, வியாபாரிகள் கூறியதாவது:கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு, ஒரு வாரமே உள்ளதால் கடந்த சில நாட்களாக ஜவுளி விற்பனை சூடு பிடிக்க துவங்கி உள்ளது. நேற்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், கேரளாவில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள், வியாபாரிகள் ஆடைகளை வாங்கி சென்றனர். தவிர மழை மற்றும் பனிக்காலமாக உள்ளதால், அதற்கேற்ப துண்டு, லுங்கி, வேட்டி, பனியன், ஜட்டி, நைட்டி உட்பட உள்ளாடைகள், ஜமக்காளம், போர்வை, பெட்ஷீட்கள் போன்றவையும் அதிகமாக விற்பனையானது. இன்னும், 10 நாட்களுக்கு கிறிஸ்துமஸ் விற்பனையும், அதை தொடர்ந்து ஆங்கில புத்தாண்டு, பொங்கல் பண்டிகைக்கான விற்பனையும் நடக்கும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு கூறினர்.