sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கனமழையால் வெள்ளக்காடான மாநகர சாலைகள்

/

கனமழையால் வெள்ளக்காடான மாநகர சாலைகள்

கனமழையால் வெள்ளக்காடான மாநகர சாலைகள்

கனமழையால் வெள்ளக்காடான மாநகர சாலைகள்


ADDED : நவ 16, 2024 03:41 AM

Google News

ADDED : நவ 16, 2024 03:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாநகரில் நேற்று மதியம், 2:30 மணிக்கு பெரிய அளவி-லான துளிகளுடன் மழை பெய்யத்தொடங்கியது. கனமழையாக கொட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 20 நிமிடத்துடன் ஓய்ந்தது.

மீண்டும், 3:30 மணிக்கு கனமழையாக, அதேசமயம் மாநகர் முழுவதும் பரவலாக கொட்டியது. இதனால் மாநகர சாலைகளிலும், பெரும்பள்ளம் மற்றும் பிச்சைக்காரன் பள்ளம் ஓடைகளிலும் வெள்ளம் கடைபுரண்டு ஓடியது. பஸ் ஸ்டாண்ட் அருகில் சத்தி சாலையில் குளம்போல் தண்ணீர் தேங்கி, சாலை-யோரம் நிறுத்தப்பட்டிருந்த டூவீலர்கள் பாதி அளவு தண்ணீரில் மூழ்கின. வீரப்பன்சத்திரத்தில் சாலையில் மழை நீர் ஆறாக ஓடி-யது. எம்.ஜி.ஆர்., வீதியில் தாழ்வான பகுதியில் ஒரு சில குடியி-ருப்புகளுக்குள் மழை நீருடன் கழிவுநீர் புகுந்தது.சென்னிமலை ரோடு ரயில்வே டீசல்செட் பகுதியில் குளம்-போல தண்ணீர் தேங்கியது. கே.கே.நகர் ரயில்வே பாலத்தில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ரங்கம்பாளையம் ரயில்வே பாலத்தின் அடி-யிலும் தண்ணீர் தேங்கியது. இந்த மழை, 40 நிமிடம் பெய்தது.

* சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதிகளான சிக்கரசம்பா-ளையம், சதுமுகை, கொமராபாளையம், ஆலத்துகோம்பை, கே.என்.பாளையம், தாண்டாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், நேற்று மாலை, 4:20 மணிக்கு இடியுடன் பலத்தமழை பெய்தது. அரை மணி நேரம் தொடர்ந்து பெய்தது. பிறகு இடைவெளி விட்டு சாரல் மழையாக, 6:00 மணி வரை நீடித்தது. இதேபோல் தாளவாடி மற்றும் கடம்பூர்மலையிலும் மழை பெய்தது.

* பெருந்துறையில் நேற்று மதியம், 3:30 மணியளவில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. மாலை, 5:00 மணி வரை அதேவே-கத்தில் நீடித்தது. பின் விட்டுவிட்டு துாரல் போட்டது.

* கோபியில் நேற்று மாலை, 4:30 மணிக்கு, பலத்த சாரல் மழை பெய்தது. கோபி, வேட்டைக்காரன் கோவில் அருகே பூங்-கொடி என்பவருக்கு சொந்தமான தென்னை மரத்தில் இடி விழுந்து தீப்பற்றி எரிந்தது.






      Dinamalar
      Follow us