/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கடைகளை குறி வைத்து திருட்டு அச்சத்தில் மாநகர வியாபாரிகள்
/
கடைகளை குறி வைத்து திருட்டு அச்சத்தில் மாநகர வியாபாரிகள்
கடைகளை குறி வைத்து திருட்டு அச்சத்தில் மாநகர வியாபாரிகள்
கடைகளை குறி வைத்து திருட்டு அச்சத்தில் மாநகர வியாபாரிகள்
ADDED : மார் 04, 2024 07:29 AM
ஈரோடு : ஈரோட்டில் கடைகளை குறிவைத்து, சில தினங்களாக திருட்டு தொடர்வதால், வியாபாரிகள் அச்சமடைந்துள்ளனர்.
ஈரோடு மாநகரில் பூட்டிய வீடுகளை கண்காணித்து திருட்டில் ஈடுபடுவதை திருடர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். திருட்டு வழக்கில் கைதாகி சிறைக்கு சென்று சிறையில் இருந்து வெளியே வரும் நபர்களின் நடவடிக்கையை க்ரைம் போலீசார் தொடர்ந்து கண்காணிக்கின்றனர்.
இந்நிலையில் தான் மாநகரில் கடைகளை குறிவைத்து திருட்டு நடந்தேறி வருகிறது. சில தினங்களுக்கு முன் ஈரோடு-கரூர் பைபாஸ் சாலையில் பர்னிச்சர் கடை, ஸ்டுடியோவில் மர்ம நபர்கள் திருட்டில் ஈடுபட்டனர். சிசிடிவி கேமராவில் மர்ம நபர்கள் அடையாளம் தெரியவந்தது. இதற்கிடையில் கொல்லம்பாளையம் செக்போஸ்ட் அருகே காய்கறி கடை, பாஸ்ட் புட் பிரியாணி கடை, குளிர்பான கடைகளில் திருட்டு நடந்துள்ளது. சூரம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் எல்லை பகுதியில் அடுத்தடுத்து கடைகளை குறி வைத்து திருட்டு நடப்பது வியாபாரிகளை அச்சமடைய செய்துள்ளது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது: பூட்டிய கடையில் இரவில் பூட்டை உடைத்து பணத்தை குறி வைத்து மர்ம நபர்கள் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் ரோந்து மற்றும் கண்காணிப்பை அதிகரிக்க செய்து திருட்டை ஒழிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.

