முதல் தளத்தில் வகுப்பு ஒதுக்கீடு: மாற்றுத்திறனாளி ஆசிரியர் குமுறல்
முதல் தளத்தில் வகுப்பு ஒதுக்கீடு: மாற்றுத்திறனாளி ஆசிரியர் குமுறல்
ADDED : ஜூன் 12, 2026 04:52 AM

ஈரோடு:ஈரோடு கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தேன்மொழியிடம்,
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர்
உரிமைகளுக்கான சங்க செயலர் மாரிமுத்து தலைமையில் ஆசிரியர்கள்
நேற்று மனு வழங்கினர். மனு விபரம்: ஈரோடு வீரப்பன்சத்திரம் மாசிமலை
ரங்கசாமி கவுண்டர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில்
சத்தியாவதி, எஸ்.கந்தமணி ஆகிய இரு மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள்
பணி செய்கின்றனர். இவர்களை தலைமை ஆசிரியை இந்திராணி, மனம் புண்படும்
வகையில் பேசுவதும், முதல் தளத்தில் உள்ள வகுப்புகளுக்கு பாடம்
நடத்துமாறு பணிக்கிறார்.
வீல் சேரில் மாடிக்கு செல்ல இயலாதது, மனம்
புண்படும்படி பேசியதை சுட்டிக்காட்டியதும், சமாதானம் செய்வதும்
தொடர்கிறது. இந்தாண்டும், முதல் தள வகுப்புக்கு மாற்றுத்திறன்
ஆசிரியர்களுக்கு வகுப்பு ஒதுக்கப்பட்டு, கோரிக்கைக்கு பின்
தரைத்தளத்துக்கு மாற்றி உள்ளனர். மாற்றுத்திறன் ஆசிரியர்களுக்கு
தரைத்தளத்தில் வகுப்புகள் ஒதுக்க வேண்டும். தலைமை ஆசிரியர் மீது
நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.
