கோ-ஆப்டெக்ஸ் கொள்முதல் நிறுத்தம் ரூ.50 கோடி மதிப்பிலான ஜவுளி தேக்கம்
கோ-ஆப்டெக்ஸ் கொள்முதல் நிறுத்தம் ரூ.50 கோடி மதிப்பிலான ஜவுளி தேக்கம்
ADDED : ஆக 15, 2026 05:56 AM

சென்னிமலை:கோ
-ஆப்டெக்ஸ் நிறுவனம் இரு மாதமாக கொள்முதலை நிறுத்தியுள்ளதால்
ஈரோடு மாவட்ட கைத்தறி கூட்டுறவு சங்கங்களில் ரூ.50 கோடி
மதிப்பிலான ஜவுளிகள் தேங்கி உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில், 190
கைத்தறி கூட்டுறவு சங்கங்கள் இயங்கி வருகிறது. இவற்றில் பெட்ஷீட்,
தலையணை உறைகள், மெத்தை விரிப்பு, துண்டு ரகங்கள், வீட்டு உபயோக துணி
வகைகள், மேட் ரக , ஜமக்காளம் என ஜவுளி ரகங்கள், 50 ஆயிரத்திற்கும்
மேற்பட்ட உறுப்பினர்களால் உற்பத்தி செய்யப்படுகிறது. இவை
கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தால் கொள்முதல் செய்யப்பட்டு, நாடு முழுவதும்
உள்ள விற்பனை நிலையங்களில் விற்கப்படும். இதற்காக சென்னிமலை,
ஈரோடு பகுதியில் கோ-ஆப்டெக்ஸ் கொள்முதல் நிலையம் செயல்படுகிறது.
இரு மாதங்களாக ஜவுளி கொள்முதலை நிறுத்தி விட்டனர். இதனால் ஈரோடு
மாவட்டத்தில் உள்ள பிரதம கைத்தறி கூட்டுறவு சங்கத்தில், 50 கோடி
ரூபாய் மதிப்பிலான ஜவுளி ரகம் தேக்கமடைந்துள்ளது.
இதனால் கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
