ADDED : ஆக 15, 2026 05:59 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சி துறையில் அனைத்து நிலை பணியாளர்கள்,
அலுவலர்களும் கருப்பு பட்டை அணிந்து பணி செய்தனர். ஊரக வளர்ச்சி
மற்றும் ஊராட்சி துறையில் திட்ட இயக்குனர் பணியிடத்துக்கு இந்திய
வனப்பணி அலுவலர் (ஐ.எப்.எஸ்.,) நியமனம் செய்துள்ளதை ரத்து செய்ய
வேண்டும்.
கடந்த, பிப்., 28 அன்று முதல் காலியாக உள்ள, 41 உதவி
இயக்குனர் பணியிடங்களையும், நான்கு கூடுதல் இயக்குனர்
பணியிடங்களையும் பதவி உயர்வு வழங்கி நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி,
நேற்று ஊரக வளர்ச்சி துறையில் உள்ள பஞ்சாயத்து செயலர் முதல் வட்டார
வளர்ச்சி அலுவலர்கள் முதல் அனைத்து பணிகளிலும் உள்ள பணியாளர்கள்,
அலுவலர்கள் கருப்பு பட்டை அணிந்து பணி செய்தனர். ஈரோடு மாவட்டத்தில்
இப்போராட்டத்தில், 650 பேர் ஈடுபட்டனர்.
