/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தீ விபத்தில் கருகிய தென்னை, வாழை மரங்கள்
/
தீ விபத்தில் கருகிய தென்னை, வாழை மரங்கள்
ADDED : மார் 06, 2024 02:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி:அம்மாபேட்டை
அருகே, ஒலகடம் அடுத்துள்ள குட்டைமேடு பகுதியில் ஜெகதீசன், 55,
என்பவர், 70 தென்னை மரங்கள் வளர்த்து வருகிறார்.
இவரது தோட்டத்தில்
நேற்று மதியம், 2:30 மணியளவில் தீப்பிடித்துள்ளது. அக்கம்
பக்கத்தினர் உடனடியாக ஜெகதீசன் மற்றும் அந்தியூர் தீயணைப்பு
நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர். அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள்,
தீ மேலும் பரவாமல் இருக்க தண்ணீரை பீய்ச்சியடித்து கட்டுக்குள்
கொண்டு வந்தனர். இருப்பினும் ஏழு தென்னை மரங்கள், நுாற்றுக்கும்
மேற்பட்ட வாழை மரங்கள் தீயில் கருகின.வெள்ளித்திருப்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

