/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வீ.வ.வா., குடியிருப்பில் பணம் வசூல்: மறுத்தால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

ADDED : ஜூன் 10, 2025 01:20 AM
ஈரோடு, பவானி தாலுகா மைலம்பாடி அருகே கன்னாங்கரட்டில், வீட்டு வசதி வாரிய அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது. இங்கு வசிப்போர், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மனு வழங்கி கூறியதாவது:
கன்னாங்கரடு பகுதியில் வீட்டு வசதி வாரிய அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கிறோம். தற்போது குடியிருப்போர் நலச்சங்கம் என ஒரு அமைப்பை துவங்கி, மாதம் தோறும், 250 ரூபாய் ஒவ்வொரு வீட்டினரும் வழங்க கட்டாயப்படுத்துகின்றனர். வழங்க மறுத்தால் வீட்டு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்; வீட்டு பத்திரத்தை வழங்க முடியாது என்று மிரட்டுகின்றனர்.
இங்கு வசிப்போரில் பெரும்பாலானோர் வயதானவர், ஆதரவற்றவர், தினக்கூலிகள். தினமும் வேலைக்கு சென்றால் மட்டுமே எங்கள் உணவு, வீட்டுக்கான கடனை அடைக்க இயலும். இவ்வாறு வசூலிக்கக்கூடாது என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும். எங்கள் குடியிருப்புக்கு பஞ்சாயத்து மூலம் இணைப்பு வழங்கி, தண்ணீர் வழங்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.