ADDED : ஜூலை 22, 2026 06:06 AM
பெருந்துறை:பெருந்துறை ஒன்றியம் காஞ்சிக்கோவில் டவுன் பஞ்.,க்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், கலெக்டர் கந்தசாமி நேற்று ஆய்வு செய்தார்.
காஞ்சிக்கோவில்
தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ஆய்வு செய்து, வங்கி செயல்பாடு,
உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சேவை, கடன் வழங்கல் மற்றும் வசூல்
நிலவரம் கேட்டறிந்து பதிவேடுகளை பார்வையிட்டார். காஞ்சிக்கோவில்
தினசரி சந்தையில் வியாபாரிகளுக்கான அடிப்படை வசதியை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து
முத்துகவுண்டம் பாளையத்தில் குளத்தை பார்வையிட்டு, பராமரிப்பு,
துார்வாரும் பணி, நீர்வரத்து குறித்து கேட்டறிந்தார். பின்னர்
பெருந்துறை யூனியன் அலுவலகத்தில் ஆய்வு செய்தார். ஆய்வின்போது ஈரோடு
சரக துணை பதிவாளர் குமாரி மோகனா, காஞ்சிகோவில் டவுன் பஞ்., செயல்
அலுவலர் பழனியப்பன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
