/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
உழவரை தேடி வேளாண் துறை திட்டத்தை தொடங்கிய கலெக்டர்
/
உழவரை தேடி வேளாண் துறை திட்டத்தை தொடங்கிய கலெக்டர்
உழவரை தேடி வேளாண் துறை திட்டத்தை தொடங்கிய கலெக்டர்
உழவரை தேடி வேளாண் துறை திட்டத்தை தொடங்கிய கலெக்டர்
ADDED : மே 30, 2025 01:04 AM
காங்கேயம் :உழவர் நலத்துறை சார்பில் வேளாண்மை விரிவாக்க சேவைகளை, உழவர்களுக்கு கிராமங்களிலேயே வழங்கிடும் வகையில் 'உழவரைத்தேடி வேளாண்மை உழவர் நலத்துறை' திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார்.
திருப்பூர் மாவட்டத்திலும் இத்திட்டம் தொடங்கியது. காங்கேயம் ஊராட்சி ஒன்றியம் கீரனுார் ஊராட்சியில், கலெக்டர் கிஹிஸ்துராஜ் சேவையை துவங்கி வைத்தார். நிகழ்வில் விவசாயிகளுக்கு விதை, நாற்றுகளை கலெக்டர் வழங்கினார்.
காங்கேயம் வடக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் கருணைபிரகாஷ், வேளாண் இணை இயக்குனர் சுந்தரவடிவேலு, கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் பிரபு, தோட்டக்கலை துறை துணை இயக்குனர் சசிகலா, கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குனர் பிரகாஷ், விவசாயிகள் உள்பட பலர் கலந்து
கொண்டனர்.