/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ராஜன்நகரில் நடந்த கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் பங்கேற்பு
/
ராஜன்நகரில் நடந்த கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் பங்கேற்பு
ராஜன்நகரில் நடந்த கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் பங்கேற்பு
ராஜன்நகரில் நடந்த கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் பங்கேற்பு
ADDED : நவ 24, 2024 12:53 AM
ராஜன்நகரில் நடந்த கிராமசபை
கூட்டத்தில் கலெக்டர் பங்கேற்பு
சத்தியமங்கலம், நவ. 24-
உள்ளாட்சி தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும் கிராமசபை கூட்டம் நேற்று நடந்தது. ஈரோடு மாவட்டத்தில் சத்தி யூனியன் ராஜன்நகர் ஊராட்சியில் நடந்த கூட்டத்துக்கு, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தார். ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
சிறப்பாக செயல்படும் மகளிர் சுய உதவிக் குழுக்களை கவுரவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,
உள்ளாட்சி பிரதிநிதிகள், மக்கள் கலந்து கொண்டனர்.
* புன்செய்புளியம்பட்டி அடுத்த நல்லூர் பஞ்., கிராமசபை கூட்டம், நல்லுார் அரசு பள்ளி வளாகத்தில் தலைவர் மூர்த்தி தலைமையில் நடந்தது. துணை தலைவர் மற்றும் பவானிசாகர் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் முன்னிலை வகித்தனர்.
பஞ்., பகுதிகளில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து செயலர் சம்பத் அறிக்கை வாசித்தார். அடிப்படை வசதி செய்து தரக்கோரி, தலைவரிடம் மக்கள் மனுக்கள் வழங்கினர்.
* அந்தியூர் யூனியனுக்கு உட்பட்ட பச்சாம்பாளையம், நகலுார், மைக்கேல்பாளையம், கெட்டிசமுத்திரம், பர்கூர், சங்கராபாளையம், எண்ணமங்கலம், வேம்பத்தி, பிரம்மதேசம், கூத்தம்பூண்டி, மூங்கில்பட்டி, கீழ்வாணி, குப்பாண்டபாளையம், சின்னதம்பிபாளையம் ஆகிய பஞ்.,களில், கிராமசபை கூட்டம் நேற்று நடந்தது. இதில் மக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

