/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சத்தி தாலுகா மாணவர்களுடன் கலெக்டர் கலந்துரையாடல்
/
சத்தி தாலுகா மாணவர்களுடன் கலெக்டர் கலந்துரையாடல்
ADDED : ஜூலை 20, 2025 05:17 AM
ஈரோடு: சத்தியமங்கலம் தாலுகாவுக்கு உட்பட்ட அரசு, தனியார் பள்ளி மாணவ, மாணவியருடன், உயர் கல்வி ஊக்குவிப்புக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
இதில் கலெக்டர் கந்தசாமி பேசியதாவது:ஏழை மாணவர்களுக்கு உயர் கல்வி பயில பொருளாதாரம் தடையாக இருக்கக்கூடாது. அதற்காகவே புதுமைப்பெண், தமிழ் புதல்வன் திட்டங்களை அரசு செயல்படுத்துகிறது.
பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், ஆதிதிராவிடர்கள், பழங்குடியினருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. தொழில் முனைவோராக திகழ, முதல்வன் திட்டம் மூலம் திறன் பயிற்சி வழங்கப்படுகிறது. போட்டி தேர்வுகளில் பங்கேற்க, பள்ளி பருவம் முதல் தயாராக வேண்டும். அதற்கான பயிற்சி அரசு மூலம் பல நிலைகளில் வழங்கப்படுவதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.
சத்தி பகுதியை சேர்ந்த ஒன்பது அரசு பள்ளிகள், இரு தனியார் பள்ளிகளை சேர்ந்த, 10, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவியர், 27 பேர் கலந்துரையாடலில் பங்கேற்றனர். அவர்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.
சி.இ.ஓ., சுப்பாராவ், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கேசவகுமார், பள்ளிகள் துணை ஆய்வாளர் மோகன்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

