ADDED : ஆக 12, 2025 02:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு மாவட்ட மகளிர் திட்டத்தின் கீழ் செயல்படும் மகளிர் குழுக்களின் உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்தி, விற்பனை செய்யும் காலேஜ் பஜார் நிகழ்ச்சி இன்று முதல், 14ம் தேதி வரை, கோபி கரட்டடிபாளையம் கோபி கலை அறிவியல் கல்லுாரியில் நடக்க உள்ளது.
இதில் மகளிர் குழு கைவினை பொருட்கள், மண் பாண்டங்கள், பவானி ஜமுக்காளம், சென்னிமலை பெட்ஷீட், கைத்தறி சேலைகள், காட்டன் சேலைகள், பட்டுப்புடவை, ஆயத்த ஆடைகள், கால் மிதியடி, டிசைன் மிதியடி உட்பட பல்வேறு பொருட்கள், விளை பொருட்கள், உணவு பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்படவுள்ளது.