ADDED : ஜூன் 28, 2026 02:22 AM
அ நிறம் | அளவு
அந்தியூர்; அந்தியூர் அருகே எண்ணமங்கலம் பஸ் ஸ்டாப்பில், போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு பாதுகாப்பு படை எஸ்.ஐ., கார்த்தி நேற்று சோதனையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அங்கு நின்றிருந்த இளைஞரிடம் சோதனை செய்த-போது, 175 போதை மாத்திரை இருந்தது. விசார-ணையில், எண்ணமங்கலம் நாரபாளையத்தார் வீதி பிரகத்சேனா, 20; தனியார் கல்லுாரி பயோ கெமிஸ்ட்ரி மாணவர் என்பது தெரிந்தது. மாண-வரை போதை மாத்திரையுடன் வெள்ளித்தி-ருப்பூர் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
