ADDED : ஜூன் 28, 2026 02:23 AM
அந்தியூர்: அந்தியூர் அருகே முனியப்பன்பாளையத்தில், மக்கள் குறைதீர் முகாம் நேற்று நடந்தது. அந்-தியூர் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ஹரி பாஸ்கர் தலைமை வகித்தார். இதில் பங்கேற்ற வரு-வாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசி-யதாவது; மக்களை சந்தித்து குறை தீர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் முகாம் துவங்கப்-பட்டுள்ளது.
இதுபோன்ற முகாம்களில் மக்களி-டமிருந்து பெறும் குறைகள் குறித்த மனுக்களில், சாத்தியமுள்ள மனுக்களுக்கு, 15 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். தீர்வு காண முடியாத மனுக்க-ளுக்கான காரணத்தை, மனுதாரர் வீட்டுக்கு கடிதம் மூலம் அனுப்பப்படும். அந்தியூர் தொகு-தியில் ஏறத்தாழ, 5,000 பேருக்கு பட்டாக்கள் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.விழாவில் அமைச்சர் பேசி முடித்தபின், அமர்ந்-திருந்த பயனாளிகளிடம் நேரடியாக மனுக்களை பெற்றார். அப்போது மனுக்கள் கொடுக்க ஒருவ-ருக்கொருவர் முண்டியடித்தால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதைப்பற்றி கவலைப்
படாமல் தொடர்ந்து மனுக்களை பெற்றார்.
