/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கல்லுாரி மாணவி மூளைச்சாவு; உடலுறுப்புகள் தானம்
/
கல்லுாரி மாணவி மூளைச்சாவு; உடலுறுப்புகள் தானம்
ADDED : மே 03, 2024 06:45 AM
ஈரோடு : நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை அடுத்த காவேரி ஆர்.எஸ்.பகுதியை சேர்ந்த விஜயகுமார்-தமிழ்செல்வி தம்பதி மகள் சஞ்சு விகாசினி, 18; தனியார் கல்லுாரியில் பி.காம்., இரண்டாமாண்டு படித்தார்.
மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்ட நிலையில், ஈரோட்டில் சுதா பல்நோக்கு மருத்துவமனையில் பெற்றோர் அனுமதித்தனர். இந்நிலையில் மாணவி மூளைச்சாவு அடைந்தார். இதனால் மகளின் உடலுறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முன்வந்தனர். சஞ்சு விகாசினியின் கண்கள், கல்லீரல், சிறுநீரகங்கள், தோல், இரண்டு கைகள், சிறுகுடல் ஆகியவற்றை ஆப்பரேஷன் மூலம் அகற்றப்பட்டு, உறுப்புகள் தேவைப்படுவோருக்கு வழங்கப்பட்டது.
மாணவியின் உடலுக்கு சுதா மருத்துவமனை மருத்துவர், செவிலியர், ஊழியர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி உறவினர்களிடம் ஒப்படைத்ததாக, சுதா மருத்துவமனை நிர்வாக இயக்குனரும், டாக்டருமான சுதாகர் தெரிவித்தார்.