ADDED : ஜூலை 19, 2026 06:18 AM
அ நிறம் | அளவு
சத்தியமங்கலம்:சத்தியமங்கலத்தை
அடுத்த குள்ளங்கரட்டை சேர்ந்த சென்ட்ரிங் தொழிலாளி ராஜாவின்
இரண்டாவது மகள் சோனியா, 19; ஈரோடு அரசு கலை அறிவியல் கல்லுாரியில்
பி.எஸ்.சி., இரண்டாமாண்டு படித்தார்.
தாய் லீலாவதி வீட்டு வேலை
செய்யவில்லை என்று நேற்று மதியம் திட்டியுள்ளார். இதனால் கதவை தாழிட்டு
சேலையால் துாக்கிட்டு கொண்டார். அதிர்ச்சி அடைந்த லீலாவதி,
அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து மகளை மீட்டு, சத்தி அரசு
மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். மருத்துவ பரிசோதனையில் அவர்
ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. சத்தி போலீசார்
விசாரிக்கின்றனர்.
