ADDED : ஜூலை 19, 2026 06:18 AM
அ நிறம் | அளவு
சத்தியமங்கலம்:சத்தியமங்கலத்தை அடுத்த அரியப்பம்பாளையம்
திருவள்ளுவர் வீதியை சேர்ந்தவர் பெஞ்சமின் தனசேகர், 42;
அரசுப்பள்ளி ஆசிரியர். நேற்று முன்தினம் காலை மக்கள் தொகை
கணக்கெடுப்பு பயிற்சிக்கு சென்று விட்டு மாலை வீட்டுக்கு வந்தார்.
வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த வெள்ளி நெக்லஸ்,
டைமெக்ஸ் வாட்ச், கேமரா திருட்டு போயிருந்தது. அவர் புகாரின்படி சத்தி
போலீசார்,களவாணிகளை தேடி வருகின்றனர்.
