தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பள்ளி மாணவி மர்மச்சாவு

பள்ளி மாணவி மர்மச்சாவு

பள்ளி மாணவி மர்மச்சாவு


ADDED : ஜூலை 19, 2026 06:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 19, 2026 06:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சத்தியமங்கலம்:சத்தியமங்கலத்தை அடுத்த புது வடவள்ளி லட்சுமணபுரத்தை சேர்ந்த தொழிலாளி குமரேசன் மகள் சாதனா, 12; வடவள்ளி அரசுப்பள்ளி ஏழாம் வகுப்பு மாணவி. கடந்த, 16ம் தேதி இரவு தெருவில் விளையாடி கொண்டிருந்த போது, சாதனா கண் பகுதியில் பூச்சி கடித்துள்ளது. அதற்கு மருந்து தடவிய நிலையில், மறுநாள் பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர்.

சாதனா பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். சாதனாவுக்கு தைராய்டு பிரச்னை இருந்ததால், மாத்திரை சாப்பிட்டு வந்தார். மாலையில் பெற்றோர் வந்தபோது, சமையலறையில் சாதனா மயங்கி கிடந்தார். பெற்றோர் மகளை மீட்டு சத்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவ பரிசோதனையில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. உடற்கூறு அறிக்கை வந்த பிறகே, மாணவி சாவுக்கான காரணம் தெரிய வரும் என்று, சத்தி போலீசார் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us