ADDED : ஆக 30, 2026 05:46 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:சேலம்
மாவட்டம் சங்ககிரி கஸ்துாரிபட்டியை சேர்ந்த ஸ்ரீரங்கன் மகன் முகேஷ்,
18; சேலத்தில் தனியார் கல்லுாரியில் முதலாமாண்டு படித்தார். சில
மாதங்களாக கல்லுாரி செல்லவில்லை. நேற்று முன்தினம் நள்ளிரவில்
வீட்டருகே செல்லும் தண்டவாளத்தை கவனக்குறைவாக கடக்க முற்பட்டார்.
அப்போது வந்த ரயில் மோதியதில், தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த
காயம் அடைந்தார். சங்ககிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட
நிலையில் இறந்தார். இதுகுறித்து ஈரோடு ரயில்வே போலீசார்
விசாரிக்கின்றனர்.
