/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குருசாமிபாளையத்தில் கல்லுாரி மாணவர் சாவு
/
குருசாமிபாளையத்தில் கல்லுாரி மாணவர் சாவு
ADDED : செப் 25, 2025 02:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம், புதுச்சத்திரம் அருகே, குருசாமிபாளையத்தை சேர்ந்தவர் அமுதா, 44; இவருக்கு, இரண்டு மகன்கள் உள்ளனர். இதில், இளைய மகன் சூர்யபிரசாத், 21, ராசிபுரம் அருகே உள்ள தனியார் கல்லுாரியில் இன்ஜினியரிங் இறுதியாண்டு படித்து வருகிறார்.
கல்லுாரி மாணவர் சூர்யபிரசாத், நேற்று முன்தினம் இரவு வீட்டில் உணவு சாப்பிட்டுவிட்டு துாங்க சென்றார். பின், நள்ளிரவில் மாணவர் வாந்தி எடுத்துள்ளார். அதிர்ச்சியடைந்த அவரது தாய், ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சூர்யபிரசாத் உயிரிழந்தார். புதுச்சத்திரம் போலீசார், விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.