ADDED : செப் 21, 2026 05:58 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
சாஸ்திரி நகர் சர்புதீன் வீதியில் வசிப்பவர் மயூரா. இவர் மனைவி
ராஜேஸ்வரி. இவர்களின் மகள் சேத்தனா, 17; தம்பதியர், 15
ஆண்டுகளுக்கு முன் பிரிந்தனர்.
பெருந்துறையில் உள்ள கல்லுாரியில்
சேத்தனா முதலாமாண்டு படிக்கிறார். மொபைல்போனை அதிகமாக
பார்த்ததால் தாய் ராஜேஸ்வரி கண்டித்துள்ளார். இதனால் கடந்த, 18ம் தேதி
காலை மொபைல்போனை தாயிடம் கொடுத்து விட்டு கல்லுாரி சென்றுவிட்டார்.
மாலையில் வேனில் திரும்பியவர் வீட்டுக்கு வராமல் மாயமாகி விட்டார்.
புகாரின்படி சூரம்பட்டி போலீசார் தேடி வருகின்றனர்.
