தேங்கி நிற்கும் கழிவுநீரால் டெங்கு காய்ச்சல் அபாயம்
தேங்கி நிற்கும் கழிவுநீரால் டெங்கு காய்ச்சல் அபாயம்
ADDED : செப் 21, 2026 05:58 AM

புன்செய்புளியம்பட்டி:கோவை-சத்தி
தேசிய நெடுஞ்சாலையில், புன்செய்புளியம்பட்டி நகர் பகுதியில்,
வடிகால் மற்றும் சாலை விரிவாக்க பணி நடந்து வருகிறது. இதில்
புளியம்பட்டி நகராட்சி அலுவலகம் முன் மற்றும் பவானிசாகர் சாலை
சந்திப்பு பகுதியில் இரண்டு இடங்களில் சாலையின் குறுக்கே பாலங்கள்
அமைக்கப்பட்டன.
அதை தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் சார்பில் பாலம்
அமைக்கப்பட்ட இடத்தில் மீண்டும் பொக்லைன் மூலம் குழி தோண்டி குடிநீர்
குழாய் அணைக்கும் பணி நடக்கிறது. மந்தமாக பணி நடப்பதால், 15
நாட்களுக்கும் மேலாக கடைகளுக்கு முன் கழிவுநீர் தேங்கி நிற்கிறது.
இதனால் கொசு உற்பத்தி அதிகரித்து, டெங்கு பாதிப்பு அபாயம்
அதிகரித்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து கடை
உரிமையாளர்கள் கூறியதாவது: கடைகளுக்கு முன் கழிவுநீர் தேங்கி,
துர்நாற்றம் வீசுவதோடு கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. நகராட்சி
அலுவலகத்தில் மனு வழங்கியும் நடவடிக்கை இல்லை. இதனால் கடை ஊழியர்
இரண்டு பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை
பெற்றுள்ளனர். இவ்வாறு கூறினர்.
