/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
டூவீலர்கள் மோதலில் கல்லுாரி மாணவன் பலி
/
டூவீலர்கள் மோதலில் கல்லுாரி மாணவன் பலி
ADDED : நவ 10, 2024 03:04 AM
டி.என்.பாளையம்: டி.என்.பாளையம் அருகே டூவீலர்கள் மோதிக்கொண்டதில் கல்-லுாரி மாணவர் பலியானார்.
அந்தியூர், பச்சாபாளையம், மறவன் குட்டையை சேர்ந்த ரங்க-நாதன் மகன் சிதம்பரம், 22; கோபி அருகே தனியார் பொறியியல் கல்லுாரியில் மூன்றாமாண்டு படித்தார். இவரின் மாமா வெங்க-டேஸ்வரனுடன் சொந்த வேலை காரணமாக, சத்தியமங்கலத்-துக்கு பைக்கில் நேற்று சென்றுவிட்டு அந்தியூருக்கு பைக்கில் வந்தார்.
பைக்கை வெங்கடேஸ்வரன் ஓட்டினார். டி.என்.பாளையம் அருகே கொண்டையம்பாளையம் பாலம் அருகே, முன்னால் சென்ற லாரியை வெங்கடேஸ்வரன் முந்த முயன்றபோது, எதிரே கணக்கம்பாளையம், தாசன்குட்டையை சேர்ந்த வேல்முருகன் மகன் தாமரைச்செல்வன், 22, ஓட்டி வந்த பைக் மீது நேருக்கு நேர் மோதினார். இதில் துாக்கி வீசப்பட்ட சிதம்பரம், சம்பவ இடத்தில் பலியானார்.
வெங்கடேஸ்வரன் பலத்த காயம், தாமரைச்செல்வன் லேசான காயமடைந்தனர். இருவரும் கோபி அரசு மருத்துவம-னையில் சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து பங்களாபுதூர் போலீசார் விசாரிக்கின்றனர்.