கிராம தங்கல் திட்டத்தில் கல்லுாரி மாணவியர் பயிற்சி
கிராம தங்கல் திட்டத்தில் கல்லுாரி மாணவியர் பயிற்சி
ADDED : ஆக 01, 2026 06:28 AM

ஈரோடு:காந்தி கிராம கிராமிய நிகர்நிலை பல்கலை கழக வேளாண்மை மற்றும் கால்நடை அறிவியல் பள்ளியை சேர்ந்த மாணவிகள்
ஆனந்தி, கவிவர்ஷினி, நதியா, நிஷா பார்ஜோ, லேகாஸ்ரீ, திர்ஷதா ஆகியோர்,
ஊரக வேளாண்மை பணி அனுபவ திட்டம், கிராம தங்கல் திட்டத்தில், சென்னிமலை
வட்டாரம் வெள்ளோடு பஞ்., தச்சன்கரைவழி கிராமத்தில் தங்கி பயிற்சி
பெறுகின்றனர். இதில் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த நெல் மற்றும்
மீன் வளர்ப்பு பயிற்சி, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் நெல்
வயலில் மீன் வளர்ப்பு முறை, அதற்கேற்ற நெல் ரகங்கள், வயல் அமைப்பு,
ஒருங்கிணைந்த சாகுபடியில் பொருளாதார நன்மை, சுற்றுச்சூழல்
பாதுகாப்பு குறித்து விளக்கம் அளித்தனர்.
இம்முறையால் விவசாயிகளுக்கு
கூடுதல் வருவாய் கிடைப்பதுடன், பூச்சி, களை கட்டுப்பாடு மேம்பட்டு,
ரசாயன பயன்பாடு குறைந்து, மண் வளம் அதிகரிக்கும் எனவும் விளக்கினர்.
விவசாயிகள் பங்கேற்றதுடன் பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம்
பெற்றனர்.
