மக்கள் தொகை கணக்கெடுப்பு வீடு வீடாக இன்று தொடக்கம்
மக்கள் தொகை கணக்கெடுப்பு வீடு வீடாக இன்று தொடக்கம்
ADDED : ஆக 01, 2026 06:27 AM

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி வீடுவீடாக இன்று முதல் துவங்குகிறது. இதுபற்றி கலெக்டர் கந்தசாமி, நிருபர்களிடம் கூறியதாவது:
மக்கள்
தொகை கணக்கெடுப்பு பணி இன்று முதல் வரும், 30ம் தேதி வரை வீடுவீடாக
நடத்தப்பட உள்ளது. இதற்கென வழங்கப்பட்டுள்ள டிஜிட்டல் ஆப் மூலம்
கணக்கெடுப்பு நடக்கும். இதில், 33 கேள்விகள் இருக்கும்.
கணக்கெடுப்புக்கு வரும் கணக்கெடுப்பாளர்
களிடம், ஏற்கனவே விபரம் பதிவு செய்ததை தெரிவித்தால், அதை சரி பார்த்து உறுதி செய்து 'அப்ரூவல்' வழங்கிவிடுவார்கள்.
அவ்வாறு
செய்யாதவர்கள், கணக்கெடுப்புக்கு வரும் அலுவலர்களின் அடையாள
அட்டையை சரிபார்த்து, அவர்கள் கேட்கும், 33 கேள்விகளுக்கான சரியான
தகவல், விபரங்களை தெரிவித்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இதில்
சரியான தகவல்களை பதிவு செய்தால், அடுத்து நடக்க உள்ள மக்கள் தொகை இறுதி
கணக்கெடுப்பில் மிக எளிமையாக, மிக சரியான கணக்கெடுப்பை உறுதி செய்ய
இயலும். இவ்வாறு கூறினார்.
