/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
புளியம்பட்டி நகராட்சியில் 'கலர்' குடிநீர் வினியோகம்
/
புளியம்பட்டி நகராட்சியில் 'கலர்' குடிநீர் வினியோகம்
புளியம்பட்டி நகராட்சியில் 'கலர்' குடிநீர் வினியோகம்
புளியம்பட்டி நகராட்சியில் 'கலர்' குடிநீர் வினியோகம்
ADDED : மார் 29, 2025 07:31 AM
புன்செய்புளியம்பட்டி: நகராட்சியில் மஞ்சள் கலரில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்-டதால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
புன்செய் புளியம்பட்டி நகராட்சியில், 18 வார்டுகளில் வசிக்கும் மக்களுக்கு, பவானிசாகர் அணையில் இருந்து இரு குடிநீர் திட்-டங்கள் மூலம் குடிநீர் வினியோகம் நடைபெறுகிறது.தற்போது அம்ருத் திட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் வகையில் பணி நடந்து வருகிறது. இந்நி-லையில், 14வது வார்டு பகுதியில் நேற்று முன்தினம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
தண்ணீரை பாத்திரங்களில் சேகரித்து வைத்தபோது தண்ணீர் மஞ்சள் நிறமானதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக புகார் தெரிவித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ள-வில்லை.இதுகுறித்து மக்கள் கூறியதாவது:கடந்த சில வாரங்களாக நகராட்சி சார்பில் வினியோகிக்கப்-படும் தண்ணீர் மஞ்சள் நிறத்தில் உள்ளது. சுத்திகரிக்காமல் வழங்-கப்டுகிறதா என சந்தேகமாக உள்ளது. குளோரினும் கலக்கப்படு-வதில்லை.கடந்த மாதம் இரும்பு துகள் கலந்த கலங்கலான தண்ணீர் வினியோகித்தனர். தற்போது மஞ்சள் நிறத்துக்கு மாறியுள்ளது. நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்-வாறு கூறினர்.