/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆக்கிரமிப்பு அகற்றும் பணி துவக்கம்
/
ஆக்கிரமிப்பு அகற்றும் பணி துவக்கம்
ADDED : பிப் 15, 2024 11:00 AM
பவானி: வெள்ளித்திருப்பூர் அருகேயுள்ள, எண்ணமங்கலம் ஏரியிலிருந்து வழுக்குப்பாறை வரையிலான ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்பை, வருவாய்த்துறையினர் அகற்றி வருகின்றனர்.
எண்ணமங்கலம் ஏரியிலிருந்து, வழுக்குப்பாறை வரை பொதுப்பணித்துறைக்குட்பட்ட ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, எண்ணமங்கலம் பகுதியை சேர்ந்த ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்ற மூன்று மாதங்களுக்கு முன் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து அப்பகுதியில் மொத்தமுள்ள, 25க்கும் மேற்பட்ட சர்வே எண்ணில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலப்பகுதியை, நேற்று அந்தியூர் தாசில்தார் கவியரசு, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ரவி ஆகியோர் முன்னிலையில் அகற்றும் பணி நடந்தது.
நேற்று, 10 சர்வே எண்ணில் உள்ள ஆக்கிரமிப்பு பகுதிகள் அகற்றப்பட்ட நிலையில், தொடர்ந்து மற்ற பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.
மண்டல துணை தாசில்தார் ராஜசேகர், ஆர்.ஐ., சுதாகர், உதவி பொறியாளர் தமிழ்பரத், வி.ஏ.ஓ., சதீஸ்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

