/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பஸ் ஸ்டாண்ட் குறித்து கமிஷனர் ஆலோசனை
/
பஸ் ஸ்டாண்ட் குறித்து கமிஷனர் ஆலோசனை
ADDED : அக் 17, 2025 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக, 63.50 கோடி ரூபாய் மதிப்பில் சோலாரில் பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணி நடந்து வருகிறது.
இதேபோல் கனிராவுத்தர் குளம் பகுதியில், 13.81 ஏக்கரில் பஸ் ஸ்டாண்ட் கட்ட திட்டமிட்டு, ஆயத்தபணி நடந்து வருகிறது. இதுகுறித்த ஆலோசனை கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. ஆணையர் அர்பித் ஜெயின் தலைமை வகித்தார். திட்ட மதிப்பீடு, கட்டுமான அமைப்பு உள்ளிட்ட பல்வேறு ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.