ADDED : அக் 04, 2024 01:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மக்கள் பயன்பாட்டில் சமுதாய கூடம்
பவானிசாகர், அக். 4-
பவானிசாகர் யூனியன் தேசிபாளையம் பஞ்., புங்கம்பள்ளியில் பஞ்., அலுவலகத்தை ஒட்டி சமுதாய கூடம் உள்ளது. துவக்கத்தில் காதணி விழா, திருமணம் உள்ளிட்ட விழா நடந்தது. கடந்த சில ஆண்டுகளாக இந்த கட்டடத்தை, பஞ்., நிர்வாகம் பழைய இரும்பு மற்றும் தளவாட பொருட்கள் குடோனாக பயன்படுத்த தொடங்கியது. இதனால் எவ்வித விசேஷங்களையும் நடத்த முடியாமல், ஏழை மக்கள் தவித்தனர். இதுகுறித்து நமது நாளிதழில் செய்தி வந்தது.
இதன் எதிரொலியாக சமுதாய கூடத்தில் வைக்கப்பட்டிருந்த தளவாட பொருட்கள், அருகேயுள்ள பல்நோக்கு மைய கட்டடத்துக்கு மாற்றம் செய்து சுத்தம் செய்யும் பணியில் பஞ்., ஊழியர்கள் ஈடுபட்டனர். நேற்று முதல் சமுதாய கூடம் மக்கள் பயன்பாட்டுக்கும் கொண்டு வரப்பட்டதாக
தெரிவித்தனர்.

