/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
முதலமைச்சர் கோப்பைக்கான போட்டி; குமுதம் பள்ளி சாதனை
/
முதலமைச்சர் கோப்பைக்கான போட்டி; குமுதம் பள்ளி சாதனை
முதலமைச்சர் கோப்பைக்கான போட்டி; குமுதம் பள்ளி சாதனை
முதலமைச்சர் கோப்பைக்கான போட்டி; குமுதம் பள்ளி சாதனை
ADDED : செப் 30, 2024 06:51 AM
நம்பியூர்: ஈரோடு மாவட்ட அளவில், முதலமைச்சர் கோப்பைக்கான கையுந்து பந்து போட்டி சமீபத்தில் பெருந்துறையில் நடந்தது. கோபி, குமுதா பள்ளி மாணவர்கள், இறுதி போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று, ரொக்க பரிசாக தலா, 3,000 வீதம் மொத்தம், 36 ஆயிரம் ரூபாய் பரிசு தொகை பெற்றனர்.
பெண்கள் பிரிவில் குமுதா பள்ளி மாணவிகள், இறுதி போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று, ரொக்க பரிசாக தலா, 3,000 ரூபாய் வீதம் மொத்தம், 36 ஆயிரம் ரூபாய் பரிசு தொகை பெற்றனர். நாமக்கலில் நடந்த மண்டல அளவிலான கடற்கரை கையுந்து போட்டியில், குமுதா பள்ளி மாணவர் அணியும், மாணவியர் அணியும் மண்டல அளவில் இரண்டாம் இடம் பெற்று வெள்ளி பதக்கமும், தலா, 2,000 ரூபாய் மொத்தம், 8,000 ரூபாய் பரிசு தொகையும் வென்று சாதனை படைத்துள்ளனர்.
ஈரோட்டில் நடந்த மாவட்ட அளவிலான, ஆடவர் இரட்டையர் இறகு பந்து போட்டியில் குமுதா பள்ளி மாணவர்கள் தருண், கவின் மூன்றாம் இடம் பிடித்து தலா, 1,500 ரூபாய் பரிசு தொகை பெற்றனர். கையுந்து பந்து, கடற்கரை கையுந்து பந்து மற்றும் இறகு பந்து போட்டிகளில் மாணவ மாணவியர் மொத்தம், 83 ஆயிரம் ரொக்க பரிசாக பெற்று பெருமை சேர்த்துள்ளனர்.
தேர்ச்சி பெற்று வந்த மாணவர்களை, பள்ளி தாளாளர் ஜனகரத்தினம், துணைத் தாளாளர் சுகந்தி ஜனகரத்தினம், செயலர் டாக்டர் அரவிந்தன், இணை செயலர் டாக்டர் மாலினி அரவிந்தன், விளையாட்டு இயக்குனர் பாலபிரபு, முதல்வர் மஞ்சுளா, துணை முதல்வர் வசந்தி மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்,