/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆற்றில் சாயக்கழிவு கலப்பதாக புகார்
/
ஆற்றில் சாயக்கழிவு கலப்பதாக புகார்
ADDED : ஜூலை 22, 2025 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, பவானி அருகே ஜம்பையை சேர்ந்த சமூக ஆர்வலர் சேகர் தலைமையில், ஈரோடு கலெக்டர் கந்தசாமியிடம் வழங்கிய மனுவில் கூறியதாவது:
பவானியில் இருந்து அந்தியூர் செல்லும் பிரதான சாலை, காடையாம்பட்டியில் சாய ஆலைகள் செயல்படுகின்றன. இந்த ஆலைகள் கழிவு நீரை பூஜ்ய நிலை சுத்திகரிப்பு செய்யாமல், சாக்கடையில் வெளியேற்றுகின்றனர். இந்த கழிவுநீர் பவானி ஆற்றில் நேரடியாக கலந்து காவிரியில் சேர்கிறது. இப்பகுதியில் உள்ள ஆலையை கண்காணித்து, நடவடிக்கை எடுப்பதுடன், பைப் மூலம் சாயக்கழிவு நீர் வெளியேற்றுவதை தடுப்பதுடன், அதுபோன்ற ஆலைகளுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.